Asianet News TamilAsianet News Tamil

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் ....மக்கள் பீதி  

hydro carbon plan succeed people will suffer physically
hydro carbon-plan-succeed-people-will-suffer-physically
Author
First Published Mar 12, 2017, 2:01 PM IST


ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் ....மக்கள் பீதி  

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால்  மக்களுக்கு  பல  உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என விஞ்ஞானி  ஒருவர்  தெரிவித்துள்ளதால்  மக்கள்  இன்னும்  அதிக  பீதியில்  உள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, தொடர்ந்து 7 ஆவது நாளாக போராட்டம் நடைப்பெற்று  வருகிறது. இந்நிலையில் நாசா விண்வெளி நிலைய முன்னாள் விஞ்ஞானி பார்த்திபன் சில  கருத்துக்களை  முன் வைத்துள்ளார் .

மீத்தேன் எரிவாயு திட்டம்

இதற்கு முன்னதாக  சொல்லப்பட்டு வந்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை தான் தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகவும் , இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சிறுநீரக  செயலிழப்பு , புற்றுநோய்  உள்ளிட்ட நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார் .

இந்த திட்டத்திற்காக , 6000 அடிக்குகீழ் துளையிட்டு, வாயு எடுப்பதற்காக 650 வேதிப் பொருட்களை செலுத்தி வெடிக்க செய்யும்போது ஏற்படும்  வெற்றிடத்தில் விஷத்தன்மை கொண்ட பாக்டிரியாக்கள் வளரும்  எனவும்  தெரிவித்துள்ளார் . இதன் விளைவாக கொடிய நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் அதிகளவில்  ஏற்படும் அபாயம் உள்ளது என குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மக்கள் மேலும் அதிக பீதியில் உள்ளனர் . தொடர்ந்து ஹைட்ரோ கார்பன்  திட்டத்திற்கு எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர் .

Follow Us:
Download App:
  • android
  • ios