மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் கூலித்தொழிலாளியை கணவன் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தமபாளையம் அருகே கோம்பை திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் செங்கோல் மகன் வினோத்குமார். இவர் கோம்பை ராணிமங்கம்மாள் சாலை டாஸ்மாக் அருகே உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அந்த வழியே வந்த சிலர் போலிசுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் கோம்பை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் அதேபகுதியை சேர்ந்த ரீகன்ராஜா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விசாரணையில் ரீகன்ராஜா அளித்த வாக்குமூலத்தில்; வினோத்குமார் எனது வீட்டின் அருகே வசித்து வந்தார். அப்போது எனது மனைவிக்கும், வினோத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக எனக்கு பலர் சொன்னார்கள் இதனால் கோபமடைந்த நான் வினோத்குமாரை கண்டித்தேன்.

ஆனால் அவர் அதை கேட்காமல் தொடர்ந்து எனது மனைவியுடன் பழகி வந்தார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஏன் மனைவியும் வினோத்குமாருடனான கள்ளத்தொடர்பை துண்டிக்க மறுத்தார். வினோத்குமார் உயிரோடு இருந்தால் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை ஏற்படும் என நினைத்தேன். எனவே அவரை கொலை செய்ய திட்டம் போட்டேன்.

இந்நிலையில், சம்பவத்தன்று ராணிமங்கம்மாள் சாலையில் டாஸ்மாக் அருகே நடந்து வந்த வினோத்குமாரை வழிமறித்து தகராறு செய்தேன். பின்பு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி அவரை கொலை செய்து சாலையோரம் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றேன். இருந்த போதும் போலீசார் என்னை பிடித்து விட்டனர் என இவ்வாறு தனது வாக்குமூலத்தில் கூறினார். மேலும், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.