மனைவி வீட்டார் தன்னைப்பற்றி போலீசில் புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் அவமானம் அடைந்த கல்லூரி பேராசியர் ஒருவர், தனது தந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவரது மகன் ஆசீர் அங்குள்ள தனியார் என்ஜினியர் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் ஆசீருக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது சுகன்யா கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் ஆசிருக்கும் சுகன்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கணவன் –மனைவிக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அது கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுகன்யா குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த ஆசிர் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டுள்ளார். இதனிடையே ஆசிர் பணி புரியும் கல்லூரியில் இன்று அவருக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான இண்டர்வியூ நடைபெறவிருந்தது.

தனது குடும்ப சண்டை குறித்து ஆசிர், தான் பணியாற்றும் கல்லூரி நிர்வாகத்தில் தெரிவித்துள்ளார். அவர்களும் உங்கள் பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ளுங்கள் என அட்வைஸ் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனாலும் தனது மனைவி அசிங்கப்படுத்தியதால் அவமானம் அடைந்த ஆசிர் தனது தந்தையுடன் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.