கடையநல்லூரில் கணவன் மனைவி தகராறில் 4 மாத இளம் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் தானும் கழுத்தறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடையநல்லூரில் சற்று முன் நடைபெற்ற கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் ரஹ்மானிய புரம் 3ம் தெருவில் வசிப்பவர் அப்துல் காதர் (27) . இவருக்கும் தஸ்லிமா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 

ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்ற திருமண வாழ்க்கை போகப்போக பிரச்சனை ஆரம்பித்தது. அவ்வப்போது பெரியவர்கள் பஞ்சாயத்து செய்து வைத்தும் பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில் இன்று காலை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் அப்துல் காதர் திடீரென மனைவி தஸ்லிமாவை அருகில் இருந்த அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்தார். 


ரத்தம் பீச்சியடிக்க மனைவி வேரறுந்த மரம் விழுந்து துடிக்க துடிக்க இறந்து போனதை பார்த்த அப்துல்காதர் தானும் கழுத்தை அருத்து தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார், அபாயகரமான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான 4 மாதத்தில் கணவனே மனைவியை கொன்றது கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.