husband hacked killed his wifes boyfriend
மனைவியின் கள்ளக்காதலன் தனது வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துவிட்டு சென்றதால் கோபமான கணவன் டாஸ்மாக் அழைத்துச்சென்று கொடூரமாக குத்திக் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி 45. இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணும், ஒரு பையனும் உள்ளனர். அதே பகுதியில் கோபி என்கிற குமாரவேல் கேபிள் கலெக்சன் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஜோதிமணி இறந்து எட்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இவரது மகன் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கோபிக்கும் ராமசந்திர மூர்த்தியின் மனைவி லதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலானதும் ராமச்சந்திர மூர்த்தி வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டிற்க்கே வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விஷயம் அக்கம்பக்கத்தினர் ராமசந்திர மூர்த்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால் கோபமான ராமச்சந்திரமூர்த்தி கோபியை பலமுறை எச்சரித்தும் கண்டித்தும் உள்ளார்.
ஆனால் தொடர்ந்து தன்னுடைய மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கோபி என்கிற குமாரவேலை கொலை செய்ய திட்டம் போட்ட ராமச்சந்திர மூர்த்தி. கீரணத்தம் பகுதியிலுள்ள அரசு மதுபான கடையின் பார் ஒன்றிற்கு கோபியை நேற்று அழைத்து சென்றார்.
இதன் பிறகு அதே இடத்தில வைத்து கத்தியால் ஆறு இடங்களில் இடது வயிற்றுப்பகுதியில் கோபியை குத்தினார். கோபி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த ஊழியர்கள் ராமசந்திரமூர்த்தியை பிடித்து சரவணம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
