விருதுநகர்

விருதுநகரில் மனைவி திட்டியதால் போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே இ.எஸ்.ஐ காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவரின் மனைவி செல்வகுமாரி.

செல்வராஜ், வேலைக்குச் செல்லாமல் தினமும் சாராயம் குடித்துவிட்டுவந்து மனைவி செல்வகுமாரியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினமும் வீட்டுக்கு சாராயம் குடித்துவிட்டு வந்த செல்வராஜ், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி  "வேலைக்க் செல்லாமல் இப்படி தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறீர்களே!" என்று கடும் சொற்களால் வசை பாடிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

போதையில் மனைவி என்னை திட்டிவிட்டாளே! என்ற ஆத்திரத்தில் மதியிழந்த செல்வராஜ், அருகில் இருந்த மண்ணென்னெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்த செல்வராஜின் அலறை கேட்டு வீட்டுக்குள் நுழைந்து அக்கம்பக்கத்தினர் அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர், செல்வராஜை, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மனைவி செல்வகுமாரி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவலாளார்கள் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.