Husband arrested for murdering husband The drunkenness of drunkenness ...

கரூர்

கரூரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தலையணையால் அமுக்கி கொலை செய்த கணவரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு எஸ்.பி காலனியில் வசித்து வந்தவர் சரவணன் (37). இவரது மனைவி சபரீஸ்வரி(23).

சரவணன் நாள்தோறும் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து மனைவி சபரீஸ்வரியும் தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி இரவு வழக்கம்போல குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார் சரவணன். அதனால், அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது.

இந்த தகராறில், ஆத்திரமடைந்த சரவணன், தனது மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பசுபதி பாளையம் காவலாளர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி, கரூரில் பதுங்கியிருந்த சரவணனை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், நேற்று அவரை சிறையில் அடைத்தனர்.