Human Rights Commission notices to Tamilnadu Government
20 மாணவர்கள் அலகு குத்தியது தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆனையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவர் மீண்டு வர வேண்டும் என்று அதிமுகவினர் பல்வேறு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மண் சோறு சாப்பிடுவது, அங்க பிரதட்சனம் செய்வது, சிறப்பு வழிபாடுகள் நடத்துவது, அலகு குத்துவது என நடத்தினர்.
அது மட்டுமல்லாமல் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.
ஜெயலலிதா மீண்டு வர வேண்டி, கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அன்று சென்னை, ஆர்.கே. நகரில், 20 பள்ளி மாணவர்கள் அலகு குத்தி வேண்டுதல் நடத்தினர்.
மாணவர்கள் அலகு குத்தியது தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆனையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
