ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழப்பு : விளக்‍கம் அளிக்‍க தமிழக அரசுக்‍கு நோட்டீஸ்!

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்துள்ளதற்கு, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்‍கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் அனுப்பி உள்ள நோட்டீசில், ஊடகங்களில் வெளியான செய்திகளில், கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. விவசாயிகள் உயிர்வாழ்வதற்கான உரிமையை இழந்திருப்பது மாநில அரசு துறைகளின் தோல்வியையும் செயலற்ற தன்மையையும் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொள்கைகளை உருவாக்குபவர்கள் விவசாயிகளை கவனத்தில் கொள்வதில்லை என்று கூறியுள்ள ஆணையம், விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து 6 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளது.