Asianet News TamilAsianet News Tamil

சினிமா டிக்கெட் விலை எவ்வளவு – ஜி.எஸ்டி குழப்பத்தால் முன்பதிவு நிறுத்தம்…

How much will be the cinema tickets?- advanced booking are stopped
How much will be the cinema tickets?- advanced booking are stopped
Author
First Published Jun 30, 2017, 4:06 PM IST


இன்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி அமலுக்கு வருவதால் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் எவ்வளவு உயரப்போகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் அலைமோதுகின்றனர்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையிலான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை இன்று நள்ளிரவு முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.How much will be the cinema tickets?- advanced booking are stopped

இதற்கான அறிமுக விழா இன்று நள்ளிரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,குடியரசுத் துணைத் தலைவர் அமித் அன்சாரி, மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மக்களவை துணைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். 

இதனிடையே தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பதால் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் டிக்கெட் எவ்வளவு உயரப்போகிறது என்று தெரியாமல் ரசிகர்கள் அலைமோதுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios