சேந்தமங்கலம்,
சேந்தமங்கலத்தில் திடீரென இரண்டு கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் அணைப்பதற்குள் மொத்தமாக சாம்பலாயின.
சேந்தமங்க்லத்தில் உள்ள புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் காரைக்குறிச்சிபுதூர் உள்ளது. இங்குள்ள மேற்கு அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு (25). இவருக்குச் சொந்தமான கூரை வீட்டின் அருகே மற்றொரு உள்ள கூரைவீட்டில் வசித்து வருபவர் சகுந்தலா (40).
இந்த நிலையில் நேற்று அந்த இரண்டு வீடுகளும் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
வீட்டிற்குள் இருந்து கரும்புகை வந்ததால் அக்கம், பக்கத்தினர் அதிர்ந்தனர். அதனையடுத்து இராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த தீயை முழுவதுமாக அணைத்தனர்.
எனினும், இந்த தீ விபத்தில் இரண்டு வீடுகளும் முழுவது எரிந்து சாம்பலானதோடு வீடுகளில் இருந்த ரூ.1 இலட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து சேதமடைந்தது.
மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் தீ வைத்தனரா? என்று தெரியாததால் வீட்டின் உரிமையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
