சென்னையில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 32 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.  

இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். உணவகங்களின் தலைமை அலுவலகம், கார்பேரேட் அலுவலகங்களில் ரெய்டு நடப்பதால், ரெய்டுக்கு உள்ளாகிய நிறுவனத்தின் உணவகங்கள், இனிப்பகங்களின் பிற கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உணவகங்களின், தலைமை அலுவலகங்கள் மட்டுமின்றி, மேலாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரை அடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டு நாளையும் தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.