Hot sun in tamilnadu today and rain in south district

தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் என்றும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனது. பெரும்பாலான் மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. பல இடங்களில் குடிநீருக்காக பொது மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.



மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்பட, 15க்கும் மேற்பட்ட உள் மாவட்டங்களில், சூறை காற்று வீசும் என்றும், சில இடங்களில், இடியுடன் கூடிய வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.