யார் ஓசூர் மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. ஓசூரில் தற்போதைய நிலவரப்படி 13 இடங்களில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது.. அதன் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் இதோ உங்களுக்காக..
ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகளை உள்ளன. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக ஓசூர் மாநகராட்சியை கைப்பற்றுகிறது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓசூர் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேயர் பதவி குறித்து திமுக தரப்பில் ஒரு ஆண் 7-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தையா மற்றும் ஒரு ஆண் 27 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியா அதேபோல் அதிமுக சார்பில் ஒரு ஆண் 27வது வார்டில் போட்டியிடம் நாராயணன் வேட்பாளர் மற்றும் 14 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ராமு மற்றும் வேட்பாளர் பாலநாரயணன் தேர்ந்தெடுக்க உள்ளதாக ஓசூர் மாநகராட்சியில் கூறப்படுகிறது.

ஓசூர் நகராட்சி 13-வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய சட்டக் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி யஷாஸ்வினி (22) வெற்றி பெற்றிருக்கிறார்.
ஓசூர் மாநகராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 45 வார்டுகளில் திமுக - 21, காங்கிரஸ் - 1, அதிமுக - 16, பாமக - 1, பா.ஜ., - 1, சுயேட்சை - 5 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 23 இடங்களை எந்த கட்சியும் கைப்பற்றாததால், திமுக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுகிறது.
