Asianet News TamilAsianet News Tamil

#Breaking | கமல்ஹாசனுக்கு கொரோனா… வெளியானது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிக்கை!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

hospital statement about kamalhasan health condition
Author
Chennai, First Published Nov 22, 2021, 6:58 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதை அடுத்து அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று (Coronavirus) உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

hospital statement about kamalhasan health condition

முன்னதாக அவருக்கு தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதை அடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

hospital statement about kamalhasan health condition

அதில், கமல்ஹாசன் சுவாச பாதையில் தொற்று பாதிப்பு மற்றும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios