பள்ளிகளுக்கு விடுமுறையா.? ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம் - முழு விபரம்
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல்வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2 ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும், திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புதன்கிழமை (ஜூலை 5) நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமையான நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.