திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஆணகளுக்கான வலைகோற் பந்தாட்ட போட்டி நாளை மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளீயிட்டார்.
அதில், “திருவண்ணாமலை மாவட்ட அளவில் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 13–ஆம் தேதிகளில் நடக்கிறது.
இப்போட்டிகளில் வயது வரம்பின்றி ஆண்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள் தங்களது பெயர், முகவரி அடங்கிய நுழைவு படிவத்தினை வெள்ளிக்கிழமை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாலை 5 மணிக்கு பின்னர் வழங்கப்படும் நுழைவு படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணியினர் மண்டல அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள். மேலும் வெற்றி பெறும் அணியினருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்” என்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
