இந்து சமய அறநிலையத்துறையில் குளறுபடி!.. ஐஏஎஸ் அதிகாரி தூக்கி அடிக்கப்பட்ட சம்பவம் !!
தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு அரசு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொற்றுப்பேற்றபோது தலைமை செயலாளர் முதல் தலைமைச் செயலக பிஆர்ஒக்கள் வரை மாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது.
அண்மையில் புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு அரசு 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பணி உயர்வு வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்றும் அரசு அதிகாரி ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையில் ஜூனியருக்கு உயர்ப்பதவி கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்ந்து கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ், நீர்வளத் துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!