ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு பின்னர் இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில் 30 சதவீதத்துக்கு மேல் பெண்களை சேர்க்கக் கூடாது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு பின்னர் இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில் 30 சதவீதத்துக்கு மேல் பெண்களை சேர்க்கக் கூடாது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான உயர்கல்வித்துறையின் அறிக்கையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும்.
கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை கல்லூரியின் Prospectus இல் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு படிப்பிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சேர்க்கை முழுவதும் மெரிட் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து சேர்க்கை வழங்கிட வேண்டும். ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு பின்னர் இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில் 30 சதவீதத்துக்கு மேல் பெண்களை சேர்க்கக் கூடாது. இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்பட கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
