Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை செய்துக்கொண்ட வழக்கு... இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

ஆன்லைன் ரம்மியால் இருவர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

highcourt refuses to issue interim order in online rummy case
Author
First Published Mar 10, 2023, 6:35 PM IST

ஆன்லைன் ரம்மியால் இருவர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸுக்கு இடக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் பணத்தை இழந்துள்ளனர். அவ்வாறு பணத்தை இழப்போர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே ஆன்லைன் ரம்மியால் 17 உயிரிழந்ததாக பதிவான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்; 15 பேர் காயம்

அதன்பேரில் ஆன்லைன் சூதாட்ட மரணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை தொடர்பாக விளக்கம் கேட்டு அந்தந்த நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த வகையில் ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரம் உள்ளே!!

இந்த நிலையில் இந்த நிலையில் சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து கேம்ஸ் 24*7 என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டதோடு, கேம்ஸ் 24*7 நிறுவனம் தொடர்ந்த வழக்கை மார்ச் 14க்கு ஒத்திவைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios