Asianet News TamilAsianet News Tamil

சேவல் சண்டைக்கு அனுமதி... ஆனால் இதற்கெல்லாம் அனுமதி இல்லை... மதுரைக்கிளை அதிரடி!!

தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜனவரி 17ல் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. 

highcourt madurai bench allows cockfighting in theni
Author
Madurai, First Published Jan 7, 2022, 5:28 PM IST

தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜனவரி 17ல் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. தமிழர் திருநாளான தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் விழாக்களை விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பொதுமக்கள் வீர விளையாட்டுகள் நடத்தி பரிசுகள் வழங்குவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கள் பண்டிகை நெருங்குவதை அடுத்து ஜல்லிகட்டு நடக்குமா என்கிற கேள்வி எழுந்தது. கொரோனா மற்றும் ஒமைகரான் வைரஸ் தொற்று வேகமாக பரவியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு இரவு நேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

highcourt madurai bench allows cockfighting in theni

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு ஜல்லிகட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

highcourt madurai bench allows cockfighting in theni

இந்த நிலையில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி அளித்துள்ளது. தேனி உத்தமபாளையம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன், ஜனவரி 17 ஆம் தேதி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி போன்றவற்றை கட்டக்கூடாது, சேவல்கள் உயிரிழக்கும் வகையில் சண்டை நடத்தக்கூடாது, சண்டைக்கு விடப்படும் 2 சேவல்களும் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios