நீதிமன்றத்தில் நடைபெறும் வாதங்களை எல்லாம் செய்தியாக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசுக்கு எதிரான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தத் தகவல் சில மணி நிமிடங்களிலேயே ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இது குறித்து நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷிடம் அரசு வழக்கறிஞர் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, நீதிமன்றத்தில் நடைபெறும்  வாதங்களை எல்லாம் செய்தியாக்கக் கூடாது என்றும், முறையான உத்தரவு பிறப்பித்த பின்னரே அதை செய்தியாக்க வேண்டும் என்றும் கூறினார்.

தாம் நினைத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றும் நீதிபதி ஹூலுவாடிஜி.ரமேஷ் எச்சரிக்கை விடுத்தார்.