hevay traffic in chennai
மழையிலும்,போக்குவரத்து நெரிசலிலும் மிதக்கும் சென்னை ...!
வடகிழக்கு பருவ மழை தொடங்கியவுடன் மழையின் வேகம் கொன்ம்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது
இதன் காரணமாக நேற்று இரவு முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது
சென்னையை பொருத்தவரை அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தொடந்து மழை நீடித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது .
அதே வேளையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் என்பதால் பல்வேறு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்,நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்

இதன் காரணமாக சென்னை அண்ணா சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.மேலும்,அலுவலகம் செல்வோர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இந்நிலையில் மழையானது இதே போன்று தொடரும் என்றும் குறிப்பாக நவம்பர் 2 ஆம் தேதி வரை அதிக அளவில் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
