Heavy strom in dharmapuri child dead
தருமபுரியில் வீசிய சூறைக்காற்றில் வீட்டின் மேற்கூரை பறந்ததில் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் உட்பட பல இடங்களில் பலத்த காற்றடக் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அகிருந்த மரங்கள் வேறோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன. பல வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
இத
னிடையே காரிமங்கலத்தை அடுத்த பூலாப்பட்டியில் மேஸ்திரி குமார் என்பவரது வீட்டின் மேற்கூரை சூறைக்காற்றால் காற்றில் பறந்தது. இதில் வீட்டின் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குமாரின் 11 மாத பெண் குழந்தை தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்டது.
இதைக் கண்டு பயந்து போன குமார் தொட்டிலை எடுத்து பார்த்த போது, குழந்தை வைஷ்ணவி படுகாயமடைந்திருந்தார்.
இதையடுத்த குழந்தை வைஷ்ணவியை காரியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
