heavy rush in t nagar

தீபாவளியை யொட்டி சென்னை தி நகரில் அலைமோதுகிறது கூட்டம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தீபாவளிக்கு இடண்டு நாட்களே உள்ள நிலையில்,சென்னை தி நகரில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

பொதுவாகவே விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் தி.நகருக்கு வருவது வழக்கம்.இந்த நிலையில் புத்தாடையை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால்,போலீசார் அதிக எண்ணிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும்,பொருட்கள் திருடு போவதை தடுக்க, தி நகரில் கை வரிசை காட்டி வந்த பல திருடர்களின் முகத்தை “பேஸ்டிடக்டிவ்”மூலம் ஏற்கனவே பதிவு செய்து உள்ளனர்.
இதன் மூலம், யாரேனும் திருடமுயன்றால், மிக எளிதில் அடையாளம காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

இன்றும் நாளையும் கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் மேலும் அங்கு சென்று இந்த கூட்டத்தை அதிகரிக்காமல் இருப்பதே நல்லது. 
வெளியூரில் இருந்து கூட, ஏராளமான மக்கள் தி.நகரில் பர்சேஸ் செய்ய வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.