வட மாவட்டங்களில் வேலையை காட்டப்போகும் கனமழை.. எப்போ தெரியுமா? வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

வட மாவட்டங்களான விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட உள் மாவட்டங்களில் இன்று மதியம் மற்றும் மாலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வட உள் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் சஞ்சய் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காலை நமது வானிலை அறிக்கையில் எதிர்பார்த்தபடி, வட மாவட்டங்களில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மதியம் மற்றும் மாலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் மழை ஆரம்பம் ஆகிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.