Heavy Rain May be hit Today at chennai

கோடை வெப்பம் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் நகர் முழுவதும் காற்றுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது.

இந்தச் சூழலில் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்றிரவு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பகலின் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் உள்மாவட்டங்களின் ஒரு இடங்களில் கன மழைக்கு பெய்யும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் சென்னை மக்கள்

கோடை வெப்பம் சுட்டெரித்தநிலையில் சென்னையில் தற்போது இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.வெப்பம் தணிந்து அவ்வப் போது குளிர்ச்சியான காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

நீர் இருப்பு அதிகரிப்பு

சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கடும் வறட்சியால் வற்றக் கூடிய நிலையில் இருந்த ஏரிகள் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, உள்ளிட்ட ஏரிகளில் நீர் தேக்கத்தின் அளவு ஓரளவு அதிகரித்துள்ளது.