குட் நியூஸ்.! இனி வெயில் தொல்லை இருக்காது.. ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம்.!!
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த ஒரு சில தினங்களாக பல பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
மே மாதம் கத்திரி வெயில் தொடங்கும் என்பதால் வெயிலின் தாக்கம் இன்னும் வரும் நாளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் 100 டிகிரிக்கு குறைவில்லாமல் வெயிலின் தாக்கம் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் மக்களுக்கு கூலான அப்டேட்டை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்ற அப்டேட் தான் அது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 23 ஆம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 24, 25-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் பெய்யும்.
மேலும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!
அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். ஏப்ரல் 22-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 4 செ.மீ., கரூர் மாவட்டம் பாலவிடுதி, கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதேபோல தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி, சேலம், மதுரையில் 104, திருச்சி, கரூர் பரமத்தியில் 103, வேலூர், நாமக்கல்லில் 102, தஞ்சாவூரில் 101, திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்