தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தினால் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் மதுரையில் இன்று(செப்.,30) அதிகாலை 2 மணி முதல் கனமழை பெய்தது. 

மதுரை - காளவாசல், ஆரப்பாளையம், பெரியார் நிலையம், கோச்சடை, சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை விடியும் வரை நீடித்தது


இதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி கோன்ற இடங்களில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில் தமிழகத்தில், தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம், வேதாந்தத்தில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதனிடையே  வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால் இன்று தமிழகத்தின் , 15 மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது..
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள்; கோவை, நீலகிரி ஆகிய மேற்கு மாவட்டங்கள்; தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்புள்ளது எனறும்,  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என, என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.