கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயில், 3 நாட்களாக மக்களை விட்டு வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் மேக மூட்டமும், லோசன மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை முதல் சென்னை நகரில் மேக மூட்டத்துடன் இருந்தது. இதனால், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டின் குடும்பத்துடன் வெப்ப சலனத்தில் இருந்து தப்பி சந்தோஷமாக உள்ளனர்.

இந்நிலையில், இன்று இடியுட்ன் கூறிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த றிக்கையில் கூறியிருப்பதாவது.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.