அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும், வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், தவிக்கின்றனர். இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசிவருகிறது.

கடந்தத சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. ஆனாலும், அனல் காற்று, புழுக்கம் குறையவில்லை.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், இன்னும் 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

மேற்கு திசையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், வெப்ப சலனம் ஏற்படும். வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றார்.