Asianet News TamilAsianet News Tamil

இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை தொடருமா..? வெதர் அப்டேட்

தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Heavy Rain in 18 tamil nadu districts today
Author
First Published Nov 2, 2022, 2:57 PM IST

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”இது தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

02.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை.. சென்னையில் விடாமல் தொடரும் மழை.

05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, சிவகங்கை, மதுரை, விருதுநகர்‌, தென்காசி, தேனி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌, இராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌,
மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல் சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios