இந்திய பெருங்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வனிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில்;- குமரி கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

 

அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று திருவண்ணாமலை, புதுச்சேரி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 4 செ.மீ., சிதம்பரம், பாம்பனில் 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.