இந்த 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை!

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Heavy rain alert...metrological centre

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 Heavy rain alert...metrological centre

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகை-தேவாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

வங்கக் கடலில் 22-ம் தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் இன்று வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலையே காணப்பட்டது.Heavy rain alert...metrological centre

இந்நிலையில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios