heavey rain in tamil nadu

இன்று தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த 10 நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஒரு வாரம் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது..

அதன்படி, இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் , 12-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 14-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.