Asianet News TamilAsianet News Tamil

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…. விசாரணை 2023 ஜனவரிக்கு ஒத்திவைப்பு!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அரசு தரப்பு அவகாசம் கேட்டதை அடுத்து விசாரணையை 2023 ஜனவரிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hearing adjourned to jan 2023 of kodanadu murder and robbery case
Author
First Published Dec 2, 2022, 5:04 PM IST

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அரசு தரப்பு அவகாசம் கேட்டதை அடுத்து விசாரணையை 2023 ஜனவரிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 26.10.2022 முதல் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட கேரளாவைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய தகவல்

இதனிடையே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவதால் 720 சிடிஆர் (கால் டீடைல்ஸ் ரெக்கார்டு) விவரங்கள் சேகரிக்கும் பணி மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள 316 சாட்சிகளிடம் கூடுதல் விசாரணை, மற்றும் பல்வேறு மாநிலங்களில் புலன் விசாரணை நடைபெற வேண்டியுள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அவகாசம் கேட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 2023 ஆம் ஆண்டு ஜன.27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தங்கப்பதக்கம் வென்று தந்தையை இழந்த வீராங்கனை லோகப்பிரியா.. கலங்கிய டிடிவி.தினகரன்..!

இந்த வழக்கில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் டிஎஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பி சந்திர சேகர், டிஎஸ்பி வினோத், ஆய்வாளர்கள் தனலட்சுமி, வேல்முருகன் சைபர்கிரைம் மாதவன் உள்ளிட்டோர் புலனாய்வு விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம், சிபிசிஐடி காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிலவரங்கள் குறித்து விளக்கங்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை 2023 ஜன.27  ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios