Alert : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. ஆட்சியர்களுக்கு அலெர்ட் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர்

Tamilnadu corona : தமிழ்நாட்டில் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

Health Secretary Senthilkumar has written a letter to the district collectors regarding corona precautionary measures

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாவது அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால் அது விரைவாகக் கட்டுக்குள் வந்தது. இதன் காரணமாக மாநிலத்தில் விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மாஸ்க், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்தன.

தமிழ்நாட்டில் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்துவரும் தொற்று விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். 

சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைககள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளோருக்கு பாரசிட்டமால்,  சிங்க்,  வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கதொலைபேசி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும், பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளவை இவர்கள் பரிசோதித்து வர வேண்டியது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios