Asianet News TamilAsianet News Tamil

அலர்ட்..! அதிகரிக்கும் கொரோனா..எல்லா மாவட்டங்களிலும் இதையெல்லாம் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.. செயலர் கடிதம்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவரபடுத்தவும்  போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

Health secretary Letter
Author
Tamil Nadu, First Published Jan 3, 2022, 3:01 PM IST

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவரபடுத்தவும்  போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் , மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.அதில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது , அடிக்கடி கைகளை  கழுவி சுத்தமாக இருப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கூட்டம் சேரும் இடங்களில் முறையான தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுஇடங்களில் கொரோனா விதிமுறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்க தயங்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களை பொதுஇடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வைப்பதே நோக்கம் எனவும் குறிப்பிட்டு, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் கவனம் செலுத்தி தொற்றாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்துவது , தனிமைப்படுத்துவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்யவும் ,அறிகுறி உடையோருக்கு உடனடியாக பரிசோதனை செய்யவும் , பரிசோதை செய்து முடிவுகள் வரும் வரை சம்பந்தப்பட்ட நபரை தனிமைபடுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டு தனிமையில் இருப்போரை தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் பரிசோதனை,கண்காணிப்பு, தனிமைபடுத்துதல் ஆகியவற்றிற்கான வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்தும் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள போது, கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மேலும் 50 ஆயிரம் படுக்கைகளை உருவாக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுபாடு அறை முழு அளவில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இதனிடையெ நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை அடுத்த படியாக செங்கல்பட்டில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.கோயம்புத்தூரில் 80 பேருக்கும், திருப்பூரில் 68 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 47 பேருக்கும் தூத்துக்குடியில் 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios