வெள்ள நிவாரண பணிக்காக சென்னை வரும் போது விபத்து! உயிரிழந்த சுகாதார அலுவலர்! இரங்கல் தெரிவித்த கையோடு நிதியுதவி

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

Health officer who died in a road accident... CM Stalin announced financial assistance tvk

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணியினை மேற்கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி அவர்கள் சென்னைக்கு வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவ்விபத்தில் உயிரிழந்த ஜெயபால்மூர்த்தி அவர்களின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவரது குடும்பத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு உடனடியாக அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதையும் படிங்க;- School Leave : புயல் வெள்ள பாதிப்பு.. சென்னையில் நாளையும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் முருகானந்தம் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios