Asianet News TamilAsianet News Tamil

இவர் பெயர் தெரியாது...! ஆனால் யார் இவர் தெரியுமா..?

he is a great personality in chennai
he is a great personality in chennai
Author
First Published Jan 28, 2018, 9:03 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


ஷேர் ஆட்டோவில், கிண்டியிலிருந்து போரூர் நோக்கி தினமும் பயணம் செய்யும் இந்த நபர் ஒரு பால் வியாபாரி ....

தன் கையில்,இரண்டு பால் டின்களை கொண்டு செல்வார் ...அதில்  பிரெஷாக பால் கறந்து கொண்டு செல்வார் ....
இதை பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் ...பரவாயில்லை இந்த சிட்டியில் இதையெல்லாம் பார்க்க முடிகிறேதே என்று....

அவ்வாறு செல்லும் போது சக பயணிகளிடம்,ஜாலியாக  பேசிக்கொண்டே செல்வார் இந்த  பெரியவர்.

மிகவும் சாதாரணமான தோற்றம் கொண்ட  இவரை பற்றி சக  பயணி  ஒருவர்.....தனது பேஸ்புக்பக்கத்தில் என்ன பதிவிட்டு உள்ளார்  தெரியுமா.?

"இவர் பெயர் தெரியாது...ஆனால் இவரை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்...நேரம் இருந்தால் படிங்க...

இன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஷேர் ஆட்டோவில், கிண்டியிலிருந்து போரூர் நோக்கி வந்துக்கொண்டிருந்தேன்...

அப்போது ஒருபெரியவர் தன் கையில்,இரண்டு பால் டின்களை கொண்டு வந்தார்...அதாவது அப்போது தான் பிரெஷாக பால் கறந்து கொண்டுவந்துள்ளார்...

எனக்கு ஒரு ஆச்சர்யம்...பரவாயில்லை இந்த சிட்டியில் இதையெல்லாம் பார்க்க முடிகிறேதே என்று....

உடனே அவரிடம் பேச தொடங்கிவிட்டேன்,இப்ப தான் fresh ah கொண்டு வரீங்களானு....
உடனே ஆமாம் மா....னு சொன்னார் ....

அடுத்து அவர் என்னிடம் கேட்டது....

Actually where are you working for …and what kind of work you are doing ..?

அப்படியே இன்ப அதிர்ச்சியாக இருந்தது....என்ன ஒரு நுனிநாக்கு ஆங்கிலம்...மெய் மறந்து வியந்துவிட்டேன்...

அடுத்து, where do u residing at … னு கேட்டார் ....

இப்படியே ஆங்கிலத்தில் உரையாடல் நடந்தது..

He said , “ i am graduated and doing this business ,I used to go here and there and having lots of cow and all” he said

அதற்குள் அவர் இறங்கும் இடம் வந்துவிட்டது...உடனடியாக அவரிடம் அனுமதி பெற்று ஒரு போட்டோ எடுத்தேன்....

பின்னர் என்னை வாழ்த்திவிட்டு இறங்கினார்....குட் நைட் னு சொல்லிட்டு கிளம்பி விட்டார் ...
பிறகு ஓட்டுனர் சொன்னார்.....

மேடம் நீங்க இப்ப பேசிட்டு வந்தீங்களே அவர் சாதாரண ஆளு கிடையாது....

பல கோடிக்கு அதிபதி...அவர் பெரிய அளவில் 3 இடங்களில் மாட்டுப்பண்ணை வைத்துள்ளார் ...சொந்தமாக சிட்டியில் பல இடங்கள் உள்ளது...

சென்னை வர்த்தக மையம் எதிர் திசையில் கூட மாட்டு பண்ணை வைத்து  உள்ளார்..
இப்போது தன்வேலையை முடித்துவிட்டு செல்கிறார் ....

அவருடைய பிள்ளைகளுக்கு கூட  இந்த பால் வியாபாரத்தை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்...பல கார்,ஆங்காங்கு பங்களா இருக்குனு சொன்னாரு......கடைசியாக ஒண்ணு சொன்னார் அந்த ஓட்டுனர் அண்ணா...”எத்தனையோ பேர் பயணம் செய்திருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் அவரை பார்க்கும் போது சற்று ஒதுங்கி அமர்ந்தும்,பால் டின் கையில் வைத்துள்ளதால் உட்கார இடம் கஷ்டமா இருக்குனு புலம்புவாங்க....ஆனால் எதார்த்தமாக நீங்கள் அவரிடம் பேசினதும், அவரும் உங்களிடம் இவ்வளவு நேரம் பேசியதும் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது....என்றார்.

இதெல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை .....மனிதர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் பாருங்களேன்....

பணம் வந்தால் தலை கால் புரியாமல் ஆடுபவர்கள் மத்தியில்,கோடான கோடிக்கு அதிபதியான அந்த மாமனிதரின் எளிமையான வாழ்க்கை ....மிகவும் ஆச்சர்யமாக உள்ளது..
இவ்வளவு படித்து இருந்தும் தனக்கு பிடித்ததையே வேலையாக செய்கிறார் மனிதர்...
அவர் கண்ணில் கண்ட உண்மையும், உடலில் கண்ட வியர்வையும் கடின உழைப்பு எப்படி இருக்கும் என்பதை புரிய வைத்தது....

பேஸ்புக் CEO மார்க் மற்றும் அவருடைய மனைவி எனக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல்லா தெரிவாங்க..அவர்களை சந்தித்தால் எப்படி மகிழ்ந்திருப்பேனோ அதனை விட அதிகமான மகிழ்ச்சி எனக்கு இன்று....

இவரை சந்தித்ததில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி.....

என்னமோ தெரியல...உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என தோன்றியது ....அவ்வளவுதான்...."

இவ்வாறு சக பயணி ஒருவர் பதிவிட்டு உள்ளார்.இவ்வுலகில் இப்படியும்  மாமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios