HC notice to TN govt in vice chancellor case
பல்கலை கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க கோரிய வழக்கில் அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவை துணைவேந்தர்கள் இல்லாமல் பல மாதங்களாக இயங்கிவருகின்றன.
அண்ணா பல்கலை கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் மேற்படிப்பு, வேலை உள்ளிட்டவைகளில் பல முடக்கங்கள் கானப்படுகின்றன.
2 மாதத்தில் பெரியார், பாரதிதாசன் பல்கலை கழகங்களின் துணைவேந்தர் பதவியும் காலியாக உள்ளது.
இந்நிலையில், பல்கலை கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசு, பல்கலை கழக மானிய குழுவும் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
