HC cancelled reservation for doctors
மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளே பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி சத்ய நாராயணனன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க் கையை மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்துவதா அல்லது தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டு விதிகளைப் பின்பற்றி நடத்துவதா என்பதில் பிரச்சினை உள்ளது.
இதுதொடர்பாக சமீபத்தில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘ மருத் துவ கவுன்சில் விதிகள்படி மலைக் கிராமங்கள் மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத் துவர்களுக்கு மட்டும் அதிகபட்ச மாக 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண் வழங்கவும், இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேடு அரசு மருத்துவர்களுக்கு பொருந்தாது என வும்’’ உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ‘‘தங்களுக்கான 50 சத வீத இடஒதுக்கீடு மற்றும் கூடு தல் மதிப்பெண் உள்ளிட்ட பிற சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்,
இந்த அரசு டாக்டர்கள் போராட்டம் நேற்று அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை நேற்று பிரத்யேகமாக நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்தது. இதில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீபிதியான சத்ய நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 2 நாட்களாக விசாரரித்த நீதிபதி சத்ய நாராயணன், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
அதில் இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி கிராமப்புற மருத்துவ மாணவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகிறது.
இது தொடர்பாக வழங்கப்பட்ட தனி நீதிபதியில் உத்தரவையும் நீதிபதி சத்ய நாராயணன் ரத்து செய்து உத்தரவிட்டார். மேல் முறையீட்டு மனுக்களையும் அவர் ரத்து செய்தார்.
