H. Raja greet to Banwarilal Prohit
தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து சொல்லிய ஹெச். ராஜாவுக்கு நெட்டிசன்கள் கலாய்த்து டுவிட்டர் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வருடகாலமாக தமிழகத்துக்கு ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், தமிழக கட்சி தலைவர்கள் முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், பன்வாரிலால் புரோகித்-ஐ தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
புதிய ஆளுநர் நியமனத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக மக்கள் நலன் கருதி சுதந்திரமாக, நடுநிலையோடு புதிய ஆளுநர் பன்வாரிலால் செயல்படுவார் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பன்வாரிலால் புரோகித், தன்னுடைய நண்பர் என்றும் ஹெச். ராஜா அதில் பதிவிட்டிருந்தார். இவ்வாறு ஹெச். ராஜா பதிவிட்டுள்ளதற்கு, நெட்டிசன்கள்
ராஜாவை கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.
பன்வாரிலால் உன்னோட ஃப்ரண்டா...! அப்ப வௌங்கிடும்! என்றும், பன்வாரிலால் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்தவர், ஆனால் நீ கடைசி வரை, காரைக்குடி டேன்ஸ் டேன்ஸ் யோகா யோகா டேன்ஸ் என்றும் ஹெச் ராஜாவை, நெட்டிசன்கள் கலாய்த்து டுவிட்டர் பதிவிட்டுள்ளனர்.
