குட்கா வழக்கில் வசமாக சிக்கிய திமுக நிர்வாகி... அதிரடி நடவடிக்கை எடுத்த துரைமுருகன்..!

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (52), லாசர் (58) ஆகியோர் வந்த காரை சோதனை செய்தனர். அதில் 440 கிலோ குட்கா காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. 

Gutka smuggling.. DMK executive removed tvk

குட்கா கடத்திய வழக்கில் திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவரும்,  ஒன்றிய கவுன்சிலர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். சோதைனயில் 440 கிலோ குட்கா காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. 

Gutka smuggling.. DMK executive removed tvk

இதனையடுத்து சுபாஷ் சந்திரபோஸ் (52), லாசர் (58) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் திமுக ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும்,  அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இந்நிலையில், குட்கா வழக்கில் கைதான சுபாஷ் சந்திரபோஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு! ஆளுங்கட்சியின் ஆதரவுடன் முதலில் கஞ்சா! இப்போது குட்கா! இறங்கி அடிக்கும் TTV!

Gutka smuggling.. DMK executive removed tvk

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios