Gun licenses are the same in the state of the ruling BJP How many people know in Tamil Nadu

நாட்டில் துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசனஸ் பெற்ற 33. 63 லட்சம் பேரில் 12.77 லட்சம் பேர் பா.ஜனதா கட்சி ஆளும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கூட 2-வதுஇடத்தில்தான் இருக்கிறது.

உள்நாட்டில் அரசின் அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருபவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதன் 31-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 33 லட்சத்து 69 ஆயிரத்து 444 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 12 லட்சத்து 77ஆயிரத்து 914 பேருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் தங்களின் சுயபாதுகாப்புக்காக வைத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 2011ம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு 19.98 கோடி மக்கள் உள்ளனர்.

 மொத்த எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பங்கு என்பதும், உரிய அனுமதி இல்லாமல் ஏராளமான கள்ளத்துப்பாக்கி நடமாட்டமும் இங்கு அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பா.ஜனதா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகிஆதித்யநாத் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது இடமாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 191 பேருக்கு துப்பாக்கி லைசன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதத்தால்பாதிக்கப்பட்ட மாநிலத்தில், அங்கீகாரமற்ற துப்பாக்கிகள், இல்லாத துப்பாகிகளும் வைத்துள்ளனர்.

மேலும், கடந்த 1980, 1990 களில் தீவிரவாதம் பயங்கரமாக இருந்த பஞ்சாப் மாநிலத்தில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 349 பேருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து130 பேருக்கும், அரியானாவில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 926 பேரிடமும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 968 பேருக்கும் துப்பாக்கி வைக்க லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 631 பேரிடமும், மகாராஷ்டிராவில் 84 ஆயிரத்து 50 பேரிடமும், பீகாரில் 82 ஆயிரத்து 585 பேரிடமும், இமாச்சலப்பிரதேசத்தில் 77ஆயிரத்து 69 பேரிடமும் துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும், உத்தரகாண்டில் 64 ஆயிரத்து 770 பேர், குஜராத்தில் 60, ஆயிரத்து 784 பேர், மேற்கு வங்காளத்தில் 60 ஆயிரத்து 525 துப்பாக்கி லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

டெல்லியில் 38ஆயிரத்து 754 பேரிடமும், நாகலாந்தில் 36 ஆயிரத்து 606 பேரிடமும், அருணாச்சலப்பிரதேசத்தில் 34 ஆயிரத்து 394 பேரிடமும் துப்பாக்கி லைசன்ஸ் உள்ளது.

மணிப்பூரில் 26 ஆயிரத்து 836 பேருக்கும், தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 532 பேருக்கும், ஒடிசாவில் 20 ஆயிரத்து 588 பேருக்கும் துப்பாக்கி லைசன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைவாக தாதர்நகர் ஹாவேலி, டையு டாமன் யூனியன் பிரதேசங்களில் 125 பேருக்கு துப்பாக்கி லைசன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.