புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையில் நேற்று  நடை பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விராலிமலை அம்மன்குளம் ஜல்லிக்கட்டு திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1200-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. 500 மாடுபிடி வீரர்கள் பல்வேறு குழுக்களாக களமிறக்கப்பட்டனர்.

விராலிமலை ஜல்லிக்கட்டில் 1353 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு உலக சாதனை படைத்ததாக ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த கின்னஸ் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

விராலிமலை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்கு அதிகமான காளைகள் பதிவு செய்திருந்ததைத்தொடர்ந்து இதை உலக சாதனையாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இதை மதிப்பிடுவதற்காக இங்கிலாந்தில் இருந்து மார்க், மெலினா ஆகியோர் கொண்ட குழுகண்காணித்தது.இதுவரை விராலி மலையைப் போன்று1,353 காளைகள் அவிழ்த்துவிடப்படாததால் இதை உலகசாதனையாக அந்தக் குழு அறிவித்தது. இத்தகைய அறிவிப்பு வெளியானது ஜல்லிக்கட்டு திடலில் திரண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.