தாலி கட்டும் கடைசி நேரத்தில் வேலையை காட்டிய மாப்பிள்ளை.. மணமேடையில் குலுங்கி குலுங்கி அழுத மணப்பெண்..!

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் திவ்யா என்பவருக்கும், திருப்போரூரை அடுத்துள்ள குமிழி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவரது மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த மே மாதம் 6ம்தேதி செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

Groom Escape with Girlfriend.. Shocked bride in chengalpattu

திரைப்பட பாணியில் தாலி கட்டும் நேரத்தில் காதலியுடன் எஸ்கேப் ஆன மாப்பிள்ளையால் மணப்பெண் செய்வதறியாது மணமேடையில் கலங்கி நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் திவ்யா என்பவருக்கும், திருப்போரூரை அடுத்துள்ள குமிழி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவரது மகன் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த மே மாதம் 6ம்தேதி செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இரு வீட்டார் முறைப்படி பத்திரிகை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்த பின்னர் நேற்று இரவு திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க;- சம்பள உயர்வும் கொடுத்து ஊடவே ஆப்பும் வைத்த போக்குவரத்து கழகம்! ஓட்டுநர்,நடத்துநர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில்  ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, வரவேற்பு முடிந்து உறவினர்கள் அனைவரும் தூங்க சென்றனர். இந்நிலையில், மறுநாள் காலை திருமணம் மேடையில் புடவை கட்டிக்கொண்டு மணப்பெண் தாலி, தேங்காய் பூ மாலையுடன்  தயாராக இருந்தார். அப்போது மாப்பிள்ளை அழைத்தபோது மணவரையிலிருந்து மாப்பிள்ளை காணவில்லை என்ற தகவல் பரவியது. இதையடுத்து, உறவினர்கள் மணமகனின் பெற்றோர் மணமகனை பல்வேறு இடங்களில் தேட தொடங்கினர். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், மண்மேடையில் மணப்பெண் கலங்கி நின்றார். 

இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் மணமகன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், வீட்டில் சம்மதிக்காததால் வேறு வழியின்றி தற்போது நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதாகவும் காதலித்த பெண்ணை மறக்க முடியாததால் அவரை கரம் பிடிக்க சென்றது தெரியவந்துள்ளது. மணமகனின் செல்போன் சிக்னலை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்று போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;- கட்டிய தாலியின் ஈரம் காய்தவற்குள்! மாப்பிள்ளையை தூக்கி எறிந்த மணப்பெண்! என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios