திருப்பூர் மாவட்டம் பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த 32 வயதான பனியன் நிறுவன ஊழியருக்கும், அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

திருப்பூரில் தாலிகட்டிய கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளையை ஏற்க மறுத்து புதுப்பெண் பிரிந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திருப்பூர் மாவட்டம் பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த 32 வயதான பனியன் நிறுவன ஊழியருக்கும், அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பிஎன் ரோட்டில் உள்ள ஒரு கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இதனையடுத்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரு வீட்டாரும் முறைப்படி பல்வேறு சீர்வரிசைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, மாப்பிள்ளை காலில் மெட்டி அணியும் சடங்கின்போது, காலை பார்த்த புதுப்பெண் 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை கண்டார்.

உடனடியாக இது குறித்து மணமகள் கேட்டபோது, ஒரு விபத்தில் அடிபட்டு ஆபரேஷன் செய்திருப்பதாக மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் அதை தன்னிடம் முன்பாகவே கூறாமல் மறைத்துவிட்டதாகவும், தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால், திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் வீட்டார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அப்போது காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்து திருமணம் செய்ததாக மணமகளும், அவருடைய பெற்றோரும் முறையிட்டனர். இதையடுத்து இரு வீட்டாரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இதனால் 2 குடும்பத்தினரும் அங்கிருந்து தனித்தனியே சோகத்துடன் புறப்பட்டு சென்றனர்.