ஓசி டிக்கெட் வேண்டாம்.. இந்தா காசு.. நடத்துநரை அலறவிட்ட மூதாட்டி
கோவையின் இன்று காலை அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் எனக்கு ஒன்றும் ஓடி டிக்கெட் தேவை இல்லை, இந்தா காசு எனக்கு ஒரு டிக்கெட் கொடு என்று கேட்டு சக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக அரசு தனது வாக்குறுதியின் படி முதல் கையெழுத்தாக மாநிலம் முழுவதும் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்தை அமல் படுத்தியது. இத்திட்டம் இன்று வரை நடைமுறையில் உள்ளது. ஆனால், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி எங்கள் ஆட்சியில் பெண்கள் அனைவரும் ஓசி டிக்கெட்டில் பயணம் செய்கின்றனர் என்று ஏளனமாக பேசியிருந்தார். இது பொது மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியானதும் வெகுவாக நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக எல்எஸ்எஸ், சொகுசுப் பேருந்து என்ற பெயர்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சாதாரண கட்டண நகரப் பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் அமைச்சரின் இத்தகைய பேச்சு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வகையில் இருப்பதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆர்எஸ்எஸ் தான் காரணம் - திருமா கண்டுபிடிப்பு
இந்த நிலையில் இன்று காலை கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துனர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இலவசம்னு சொல்லிவிட்டு பொதுமக்களை ஓசி டிக்கட் என்று அவமான படுத்துவதா என்று கொந்தளித்தது பேருந்துல் இருந்த சக பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. நீண்ட நேரம் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தை அதே பேருந்தில் பயணம் செய்த சக பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு.. என்ன காரணம் தெரியுமா?
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது திமுக அரசையும், திமுக அமைச்சரின் இந்த ஆனவ பேச்சுக்கும் இதற்கு மேல் யாராலும் சவுக்கடி கொடுக்க முடியாது. இனிமேலாவது திமுகவினர் தங்களின் ஆணவ பேச்சை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மோசமான பின்விளைவுகளை திமுக அரசும், திமுக அமைச்சர்களும் சந்திப்பார்கள் என தெரிவித்தனர்.