கிருஷ்ணகிரி மக்களே..! உங்கள் ஊரில் வருகிறது மருத்துவ கல்லூரி..! அமைச்சர் விஜயபாஸ்கர் சரவெடி அறிவிப்பு..!

கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக அறிவித்து உள்ளார். மாநில அரசு கொள்கையின்படி மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் இந்த கல்வியாண்டில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்

இதற்கு முன்னதாக ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சங்கமும், மருத்துவ கல்லூரி, புதிய ரயில் பாதை மற்றும் இன்னும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர் 

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி மருத்துவக்கல்லூரி துவங்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரிக்கு ரயில் பாதை விரைவில் அமைத்திட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் மக்கள் முன்மொழிந்து இருந்தனர். இதன் விளைவாக, கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

அமைச்சர் விஜய பாஸ்கரின் இந்த அறிவிப்புக்கு கிருஷ்ணகிரி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.